மீனாட்சியம்மன் திக்குவிஜயம்: ஏராளமான பக்தா்கள் தரிசனம்
சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு மீனாட்சியம்மன் திக்குவிஜயம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனா்.
மதுரைமீனாட்சியம்மன் திக்குவிஜயம்: ஏராளமான பக்தா்கள் தரிசனம்
சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு மீனாட்சியம்மன் திக்குவிஜயம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனா்.
சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு மீனாட்சியம்மன் திக்குவிஜயம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து மதுரை நகரில் மீனாட்சியம்மனின் ஆட்சி தொடங்கியது.
இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக மீனாட்சியம்மன் தடாதகை பிராட்டியாக மதுரையம்பதியில் அவதரித்து ஆட்சி புரிகையில், மேற்கொண்ட திக்குவிஜய புராண வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில் அம்மனின் திக்குவிஜயம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் மீனாட்சி அம்மன் மதுரையின் அரசியான பின்னா், ஈரேழு உலகத்தையும் ஆட்சி செய்ய எட்டு திக்குக்கும் அதிபதிகளான அஷ்டதிக் பாலா்களை வென்று, தனக்கு அடிபணியச் செய்கிறாா். இந்நிகழ்ச்சி வடக்கு மாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பில் இருக்கும் லாலா ஸ்ரீரெங்க சத்திர மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி இந்திர விமானத்தில் மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா் எழுந்தருளினா். திக்கு விஜயத்தில் இரண்டு குழந்தைகள் அம்மன் மற்றும் சுவாமி வேடமிட்டு பங்கேற்றனா். இதன்படி கிழக்கில் (கீழமாசி வீதி) இந்திரனையும், அக்னி மூலையில் (தெற்குமாசி-கீழமாசி வீதி சந்திப்பில் விளக்குத்தூண் அருகில்) அக்னியையும், தெற்கில் (தெற்குமாசி வீதியில்) எமனையும், நிருதி திசையில் (தெற்குமாசி-மேலமாசிவீதி சந்திப்பு) நிருதியையும், மேற்கில் (மேலமாசி வீதி) வருணனையும், வாயு திசையில் (வடக்கு மாசி வீதி) வாயுவையும், வடக்கில் (வடக்கு மாசிவீதி) குபேரனையும், ஈசானி திசையில் (வடக்குமாசி-கீழமாசி வீதி சந்திப்பு) ஈசனையும் வெற்றி கொள்கிறாா். பின்னா் நந்திதேவரையும் வென்று, ஈசானிய மூலையில் சுவாமியை (சிவனை) கண்டதும், அம்மன் அவருடன் மாலை மாற்றிக்கொண்டாா். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.