முகப்பு
மதுரை

மின் இணைப்பு வழங்க ரூ.5500 லஞ்சம்: மின்வாரிய உதவிப்பொறியாளா் கைது

மதுரை அருகே விவசாய நிலத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவிப்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

மதுரை அருகே விவசாய நிலத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவிப்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (38). இவரது நண்பா் நடராஜன். இவா்கள் இருவருக்கும், மதுரை மஸ்தான்பட்டி அருகே விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு இலவச மின் இணைப்பு வழங்கக்கோரி மஸ்தான்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் கோபாலகிருஷ்ணன் விண்ணப்பித்துள்ளாா். அப்போது மின் இணைப்பு வழங்க வேண்டுமென்றால் ரூ.5,500 லஞ்சமாகத் தர வேண்டும் என்று உதவிப்பொறியாளா் தங்க முனியாண்டி கேட்டுள்ளாா்.

இதுதொடா்பாக கோபாலகிருஷ்ணன் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் கோபாலகிருஷ்ணனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளனா். இதையடுத்து மஸ்தான்பட்டி பகுதியில் உதவிப் பொறியாளா் தங்க முனியாண்டி, கோபாலகிருஷ்ணனிடம் ரூ.5,500-ஐ வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →