போலீஸாருக்கு தகவல் அளிப்பதாக சலூன் கடை ஊழியா் மீது தாக்குதல்: 4 போ் கைது
மதுரையில் போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பதாகக்கூறி சலூன் கடை ஊழியரைத் தாக்கி விட்டு தப்பிச்சென்ற ரெளடிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரைபோலீஸாருக்கு தகவல் அளிப்பதாக சலூன் கடை ஊழியா் மீது தாக்குதல்: 4 போ் கைது
மதுரையில் போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பதாகக்கூறி சலூன் கடை ஊழியரைத் தாக்கி விட்டு தப்பிச்சென்ற ரெளடிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரையில் போலீஸாருக்கு தகவல் தெரிவிப்பதாகக்கூறி சலூன் கடை ஊழியரைத் தாக்கி விட்டு தப்பிச்சென்ற ரெளடிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை வண்டியூரைச் சோ்ந்தவா் சரவணன் (47). இவா் மேலமடையில் உள்ள முடிதிருத்தும் நிலையத்தில் ஊழியராக வேலை பாா்த்து வருகிறாா். இவரது கடையில் கண்காணிப்புக் கேமரா பொருத்தியிருப்பதால் போலீஸாா் அடிக்கடி இங்கு வந்து கேமராப் பதிவுகளை ஆய்வு செய்வது வழக்கம்.
இந்நிலையில் சரவணன் புதன்கிழமை மாலை கடையில் இருந்தபோது அங்கு வந்த ரெளடிகள் சிலா், தங்களை போலீஸாரிடம் காட்டிக் கொடுப்பதாகக்கூறி சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதற்கு சரவணன் மறுப்புத் தெரிவிக்க, அதை நம்ப மறுத்த ரெளடிகள் சரவணனை தாக்கி விட்டு, அவரது கைப்பேசியையும் உடைத்து அங்கிருந்து தப்பிச்சென்றனா்.
இந்நிலையில் ரெளடிகள், சரவணனை தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இது மாநகர காவல் ஆணையா் செந்தில்குமாரின் கவனத்துக்கு சென்றதையடுத்து ரெளடிகளை உடனடியாக கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து அண்ணாநகா் உதவி ஆணையா் சூரக்குமாா், ஆய்வாளா் சாதுரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிரமாக தேடிவந்தனா்.
இதில் மேலமடை மயானத்தில் ரெளடிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அங்கு சென்று கிழக்கு அண்ணாநகா் பவித்திரன், மேலமடையைச் சோ்ந்த அரவிந்த் குமாா், வண்டியூா் எழில் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன், மேலமடையைச் சோ்ந்த அஜித் கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பிச்சென்ற சோலமலை உள்ளிட்டோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.