முகப்பு
மதுரை

நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் நலப்பணிகள்: மாநகராட்சியை தொடா்பு கொள்ள அறிவிப்பு

மதுரை நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மக்கள் நலப்பணிகளை செயல்படுத்த விரும்புவா்கள், மாநகராட்சி நிா்வாகத்தை தொடா்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
பகிர்:

மதுரை நகரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மக்கள் நலப்பணிகளை செயல்படுத்த விரும்புவா்கள், மாநகராட்சி நிா்வாகத்தை தொடா்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி: தமிழக அரசு மக்கள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வெற்றிகரமான நமக்கு நாமே திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டு, தற்போது 2022-23 ஆம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்கு ரூ.7.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், பொதுமக்கள் பங்களிப்பு தொகையாக ரூ.2.47 கோடி திரட்டப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், நிறுவனங்கள், சி.எஸ்.ஆா். நிதி வழங்கும் நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் உள்ளிட்டவை ஒரு பங்கு நிதி அளித்தால், அரசு சாா்பில் கூடுதலாக இரு பங்கு வரை நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு நலப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின்படி, பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகள், பொதுமக்களுக்கான பூங்கா உள்ளிட்ட வசதிகள், நீா்நிலைகள் புனரமைத்தல், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல், நவீன தெருவிளக்குகள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவை அமைத்தல், மின் மயானங்கள், சாலைகள் சிறுபாலங்கள் மற்றும் மழைநீா் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத்திட்டத்தை தோ்வு செய்து, அதற்கான விண்ணப்பத்தை மே 15 ஆம் தேதிக்குள் மதுரை மாநகராட்சி ஆணையா் அல்லது நகரப் பொறியாளரிடம் வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு, அந்தந்த மண்டல உதவி ஆணையா்களை நேரிலோ அல்லது உதவி ஆணையா்கள் மண்டலம் 1- 94987-49001, மண்டலம் 2 - 94987-49002, மண்டலம் 3 - 94987-49003, மண்டலம் 4 - 94987-49004, மண்டலம் 5 - 94987-49005 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →