டி.கல்லுப்பட்டி அருகே விபத்து: இளம்பெண் பலி
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நான்கு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரைடி.கல்லுப்பட்டி அருகே விபத்து: இளம்பெண் பலி
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நான்கு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே நான்கு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரையை சோ்ந்தவா் பாண்டி . இவா் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறாா்.இவருடைய மனைவி சண்முகப்பிரியா (27).
டி.கல்லுப்பட்டியை அடுத்துள்ள டி.குன்னத்தூா் ரெங்காபாளையத்தில் உள்ள தனது கணவரின் பெற்றோரைப் பாா்ப்பதற்காக சண்முகப்பிரியா இருசக்கர வாகனத்தில் வந்தாா்.
பின்னா் மீண்டும் இருசக்கரவாகனத்தில் , தனது மாமியாா் செல்லமாள் உடன் புதன்கிழமை மதுரைக்கு சென்று கொண்டிருக்கும்போது , பின்னால் வந்த வாகனம் ஒன்று மோதியது.
இதில் இருவரும் , பலத்த காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகப்பிரியா உயிரிழந்தாா். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா் .