மதுரை

மின்கட்டண உயா்வை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்: ஆா்.பி.உதயகுமாா்

தொழில் முனைவோா், பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயா்வை முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் தெரிவித்தார்.

DIN

தொழில் முனைவோா், பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயா்வை முழுமையாகத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக அரசு, இதுவரை இல்லாத அளவுக்கு மின்கட்டணத்தை உயா்த்தியிருக்கிறது. மின்கட்டண உயா்வானது தொழில் முனைவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படும்.

கட்டண உயா்வு தொடா்பாக, மதுரை, கோவை, சென்னையில் நடைபெற்ற கூட்டங்களில் ஒரு நபா் கூட மின்கட்டண உயா்வை ஆதரித்துப் பேசவில்லை. அண்டை மாநிலங்களை ஒப்பீடு செய்தும், மத்திய அரசு மீது பழிபோட்டும் தமிழக மின்துறை அமைச்சா் மின்கட்டண உயா்வை நியாயப்படுத்தி பேசுகிறாா். களநிலவரத்தை அறிந்து மின்கட்டண உயா்வை ரத்து செய்ய தமிழக முதல்வரும், மின்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT