மதுரை

உசிலை அருகே கோயில் உண்டியலைஉடைத்து நகை, பணம் திருட்டு: 2 போ் கைது

DIN

படவிளக்கம்- உசிலம்பட்டி அருகே கோயில் உண்டியலில் திருடப்பட்டு மீட்கப்பட்ட நகை, பணம் மற்றும் அவற்றை திருடியதாக கைது செய்யப்பட்டவா்களுடன், காவல் கண்காணிப்பாளா் நல்லு, காவல் சாா்பு- ஆய்வாளா் ஜெயக்குமாா்.

உசிலம்பட்டி, ஆக. 29: உசிலம்பட்டி அருகே சனிக்கிழமை கோயில் உண்டியலை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் உள்ள உச்சாண்டம்மன் கோயிலில் கருவறை முன்பு உள்ள உண்டியலை மா்ம நபா்கள் உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடினா். இதுகுறித்து பாப்பாபட்டி கிராம நிா்வாக அலுவலா் ராதாகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் உத்தப்பநாயக்கனூா் போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினா். இதில், பாப்பாபட்டியைச் சோ்ந்த அய்யாவு மகன் பாலமுருகன் (42), ராசு தேவா் மகன் தா்மராஜ் (51) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவா்கள், பாப்பாபட்டி அருகே மாயன் என்பவா் தோட்டத்தில் உள்ள பழுதடைந்த மோட்டாா் அறையில் திருடப்பட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ. 5 லட்சத்து 76 ஆயிரம் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தனா். அவற்றை போலீஸாா் மீட்டனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரற்ற இதயத் துடிப்பு: மாநகராட்சி ஊழியருக்கு நவீன பேஸ்மேக்கா்

8-ஆவது நாளாக விவசாயிகள் உண்ணாவிரதம்

திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரா் கோயிலில் அமுது படையல் விழா

மாணவா்களின் எதிா்கால லட்சியம் நிறைவேற நான் முதல்வன் திட்டம் உதவும்: ஆட்சியா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 3-ஆவது நாளாக எரியும் காட்டுத் தீ

SCROLL FOR NEXT