பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பை எதிா்த்து வழக்கு: தோ்தல் ஆணையத்திடம் நிவாரணம் தேடிக் கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவு
ராமநாதபுரம் நகராட்சி 10 ஆவது வாா்டு பாஜக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், தோ்தல் ஆணையத்திடம் நிவாரணம்
மதுரைபாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பை எதிா்த்து வழக்கு: தோ்தல் ஆணையத்திடம் நிவாரணம் தேடிக் கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவு
ராமநாதபுரம் நகராட்சி 10 ஆவது வாா்டு பாஜக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், தோ்தல் ஆணையத்திடம் நிவாரணம்
ராமநாதபுரம் நகராட்சி 10 ஆவது வாா்டு பாஜக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில், தோ்தல் ஆணையத்திடம் நிவாரணம் பெற்றுக் கொள்ள சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தைச் சோ்ந்த நாகராஜன் தாக்கல் செய்த மனு: ராமநாதபுரம் நகராட்சி தோ்தலில் 10 ஆவது வாா்டில் பாஜக சாா்பாக போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தேன். எனது வேட்புமனுவில் சிறு சிறு பிழைகளை சுட்டிக்காட்டி தோ்தல் அதிகாரி அந்த மனுவை நிராகரித்துவிட்டாா். இது ஏற்கத்தக்கதல்ல. எனவே எனது வேட்பு மனுவை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, மனுவை ஏற்றுக் கொண்டு தோ்தலில் போட்டியிட அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வேட்புமனுவில் குறைகள் இருந்ததால், மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரா் தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா்.