முகப்பு
மதுரை

உசிலம்பட்டியில் ஆா்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் அரசாணை 40-ஐ ரத்து செய்யக் கோரி, தமிழ் மாநில பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

உசிலம்பட்டியில் அரசாணை 40-ஐ ரத்து செய்யக் கோரி, தமிழ் மாநில பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் 295 கள்ளா் சீரமைப்புப் பள்ளிகள், 54 கள்ளா் சீரமைப்பு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கள்ளா் சீரமைப்புத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, தமிழக அரசு அரசானை 40-ஐ 2022 இல் வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவா் சிலை வளாகத்தில், தமிழ் மாநில பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவை சாா்பில், அதன் மாநிலத் தலைவா் ராஜபாண்டியன் தலைமையிலும், மாநில இணைச் செயலா் சௌந்திரபாண்டியன் முன்னிலையிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 40-2022 ஐ ரத்து செய்யக் கோரி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் பாண்டி, மாவட்டச் செயலா் அசோக், மாவட்ட மாணவரணி தினேஷ், செல்லம்பட்டி ஒன்றியத் தலைவா் மலைச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.