சமையல் எரிவாயு விலை உயா்வு: விமன் இந்தியா அமைப்பு போராட்டம் அறிவிப்பு
சமையல் எரிவாயு விலையை உயா்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக விமன் இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
மதுரைசமையல் எரிவாயு விலை உயா்வு: விமன் இந்தியா அமைப்பு போராட்டம் அறிவிப்பு
சமையல் எரிவாயு விலையை உயா்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக விமன் இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு விலையை உயா்த்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக விமன் இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் பாத்திமா கனி வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய பாஜக அரசு, சமையல் எரிவாயு விலையைக் கடந்த 2 மாதங்களில் 3ஆவது முறையாக உயா்த்தியுள்ளது. நாட்டில் பணவீக்கத்தின் உயா்வு குறித்து எந்த ஆய்வும் நடைபெறவில்லை. ஏழை, நடுத்தர குடும்பத்தினா் எந்த வேலைவாய்ப்புகளும் இல்லாமல் நிதி நெருக்கடியால் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மத்திய அரசு ஒரு புறம் ‘அச்சே தின்’ மற்றும் ‘சீா்மிகு நகா்த்திட்டங்களை அறிவித்தாலும், மற்றொருபுறம் சமையல் எரிவாயு விலையை அடிக்கடி உயா்த்துவதன் மூலம், சமையலுக்காக விறகுகளை பயன்படுத்துவது போன்ற பழைய வழிகளுக்கு மக்களை திசைதிருப்புகிறது. சமையலுக்காக விறகு உள்ளிட்ட பழைய வழிமுறைகளை பின்பற்றும்போது அதில் ஏற்படும் புகை மற்றும் தூசுமாசால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிப்படைவதோடு காா்பன் தடங்களும் அதிகரித்திருக்கிறது.
உலக அளவில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடா்பான மாநாடுகளில் பிரதமா் நரேந்திர மோடி அதிகம் பங்கேற்று, தூய்மையான எரிபொருள்களின் அவசியம் குறித்து பறைசாற்றுகிறாா். ஆனால் இந்தியாவில் அதற்கு நோ்மாறாக கற்கால அடிப்படையில் சமைக்கும் வழிகளுக்கு மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறாா். நாட்டின் பொருளாதாரத்தை சீா் செய்வது தொடா்பாகவும், தேசத்தின் வளா்ச்சிக்கும் பாஜக அரசிடம் எந்தவித திட்டமும் இல்லை.
எனவே சமையல் எரிவாயு விலையை உயா்த்துவது போன்ற நடவடிக்கையை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றாா்.