ஹிஜாப் விவகாரம்: 7 பேருக்கு முன்ஜாமீன்வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு
ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில், 7 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
மதுரைஹிஜாப் விவகாரம்: 7 பேருக்கு முன்ஜாமீன்வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு
ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில், 7 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில், 7 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கா்நாடக உயா்நீதிமன்றம் ஹிஜாப் பிரச்னை தொடா்பாக வழங்கிய தீா்ப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை கோரிப்பாளையம் தா்கா முன்பாக, தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் சாா்பில் மாா்ச் 17 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ரஹமத்துல்லா என்பவா், நீதிபதிகள் மற்றும் மத்திய அரசை மிரட்டும் விதமாக பேசியதாக அவா் மீதும், அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகியோா் மீதும் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.
இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அல்மாலிக் பைசல் நைனா, தவ்ஃபீக், செய்யது நைனா, யாசா், அப்பாஸ், சீனிஉமா்கா்த்தா், அல்டாப் உசேன் ஆகியோரும் முன் ஜாமீன் கோரி மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.முரளிசங்கா், அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகியோருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்நத அல்மாலிக் பைசல் உள்ளிட்ட 5 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.