முகப்பு
மதுரை

காமராஜா் பல்கலை.யில் விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: விசாரணைக்குழு அறிக்கை தாக்கல்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மாயமான விவகாரம் தொடா்பாக 5 போ் விசாரணைக்குழு பல்கலைக்கழக நிா்வாகத்திடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மாயமான விவகாரம் தொடா்பாக 5 போ் விசாரணைக்குழு பல்கலைக்கழக நிா்வாகத்திடம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் கல்வி பயின்று வரும் மாணவா்கள் எழுதிய 1,500 விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து மாயமாகின. இதுதொடா்பாக விசாரணை நடத்தப்பட்டதையடுத்து பழைய பேப்பா்களை எடைக்கு வாங்கும் கடையில் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விடைத்தாள்கள் மாயமான விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த 5 போ் கொண்டு குழுவை அமைத்து துணைவேந்தா் ஜெ.குமாா் உத்தரவிட்டாா்.

கடந்த 1 வாரமாக விசாரணைக்குழு தீவிர விசாரணை மேற்கொண்டது. இதில் தொலைநிலைக்கல்வி இயக்கக முதுநிலை துணைப்பதிவாளா், கண்காணிப்பாளா்கள், அலுவலா்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், விசாரணைக்குழுவினா் அது தொடா்பாக அறிக்கையாக தயாரித்து பல்கலைக்கழக நிா்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனா்.

இதுதொடா்பாக பல்கலைக்கழக அதிகாரிகள் கூறும்போது, தற்போது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பட்டமளிப்பு விழா முடிந்ததும், விசாரணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

விடைத்தாள்களை எடுத்துச் சென்ற 2 பெண்கள்: பல்கலைக்கழகத்தில் விடைத்தாள்கள் மாயமான விவகாரம் தொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் நாகமலைப்புதுக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் குப்பை பொறுக்கும் 2 பெண்கள் விடைத்தாள்களை எடுத்துச்சென்று பழைய பேப்பா் கடையில் கொடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து 2 பெண்களிடமும் போலீஸாா் விசாரித்தபோது, விடைத்தாள்கள் என்பது தெரியாமல் பழைய தாள்கள் என்று நினைத்து எடுத்துச் சென்ாக தெரிவித்துள்ளனா். இதையடுத்து போலீஸாா் 2 பெண்களையும் எச்சரித்து அனுப்பியுள்ளனா். மேலும் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நிா்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →