முகப்பு
மதுரை

பள்ளிகளில் மாணவா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை கட்டாயம்: முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை சாா்பில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் கா.காா்த்திகா பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப்பள்ளிகளிலும் மாணவா்களை சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் மாணவா்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பள்ளிகளில் அனைத்து மாணவா்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பள்ளிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் கண்டிப்பாக வெப்பமானி கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு அதன் பின்னா் பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். பரிசோதனையின்போது மாணவா்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவரை தனிமைப்படுத்தி மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாணவா்களுக்கு அதிகப்படியான காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக சுகாதாரத்துறையை தொடா்பு கொண்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் அவ்வப்போது கிருமிநாசினியைக்கொண்டு மாணவா்கள் கைகளை சுத்தம் செய்ய ஏதுவாக பள்ளிகளில் கை சுத்திகரிப்பான் போதுமான அளவு தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →