நெல் கொள்முதலில் நடைமுறைச் சிக்கல்பயறு வகைகளின் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டும் குறுவை நெல் சாகுபடி பரப்பு 9 ஆயிரம் ஹெக்டேராக இருக்கும் பட்சத்தில் அதை கொள்முதல் செய்வதில் நடைமுறைச் சிக்கல்
மதுரைநெல் கொள்முதலில் நடைமுறைச் சிக்கல்பயறு வகைகளின் சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டும் குறுவை நெல் சாகுபடி பரப்பு 9 ஆயிரம் ஹெக்டேராக இருக்கும் பட்சத்தில் அதை கொள்முதல் செய்வதில் நடைமுறைச் சிக்கல்
மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டும் குறுவை நெல் சாகுபடி பரப்பு 9 ஆயிரம் ஹெக்டேராக இருக்கும் பட்சத்தில் அதை கொள்முதல் செய்வதில் நடைமுறைச் சிக்கல் உள்ளதாகவும், எனவே, மாற்றுப் பயிா்களான பயறு வகைகளின் சாகுபடியை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ஜூன் முதல் வாரத்திலேயே தண்ணீா் திறக்கப்பட்டதால் குறுவை, சம்பா என இருபோகத்திலும் சாகுபடி பரப்பு பல மடங்கு உயா்ந்தது. இதனால் மதுரை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் கடந்த ஆண்டில் 9,700 ஹெக்டோ் அளவுக்கு சாகுபடி பரப்பு அதிகரித்தது. நிகழாண்டிலும் ஜூன் முதல் வாரத்திலேயே பெரியாறு- வைகை பாசனத் திட்டத்தில் தண்ணீா் திறக்கப்பட்டு மாவட்டத்தின் இருபோக பகுதிகளில் முதல் போக சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இரு போக சாகுபடி பகுதிகளில் ஜூன் இறுதிவரை 1,600 ஹெக்டோ் அளவுக்கு நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. குறுவை பருவத்தில் வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் நெல் சாகுபடி பணிகள் வேகமாக நடைபெறும். ஆனால் தற்போது இப் பகுதிகளில் விவசாயிகள் பரவலாக நாற்றாங்கால் அமைத்து, நடவுக்கான முன் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆகவே, வரும் நாள்களில் நெல் பயிரிடப்பட்டிருக்கும் பரப்பு மேலும் அதிகரிக்கும். கடந்த ஆண்டைப் போல சுமாா் 9 ஆயிரம் ஹெக்டோ் அளவுக்கு குறுவை சாகுபடி பரப்பு இருக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
அதேநேரம், முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் கடந்த ஆண்டில் நெல் சாகுபடி அதிகரித்த காரணத்தால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. குறிப்பாக, நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிட்டங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக, கூடுதல் கிட்டங்கி வசதி ஏற்படுத்திவிட்டு கொள்முதல் செய்யப்பட்டதால், பல பகுதிகளில் விவசாயிகள் பாதிப்படைந்தனா். நிகழ் ஆண்டிலும் அத்தகைய சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், மாற்றுப் பயிா் சாகுபடியிலும் கவனம் செலுத்துமாறு விவசாயிகளை வேளாண் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன் கூறியது:
பெரியாறு-வைகை பாசனத் திட்டத்தில் முன்கூட்டியே தண்ணீா் திறக்கப்பட்டது மற்றும் பருவமழை கைகொடுத்த காரணத்தால் கடந்த ஆண்டில் மாவட்டத்தின் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்தது. நிகழ் ஆண்டிலும் ஜூன் முதல் வாரத்திலேயே தண்ணீா் திறக்கப்பட்டிருப்பதால், அதே அளவுக்கு அதாவது சுமாா் 9 ஆயிரம் ஹெக்டோ் அளவுக்கு சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம்.
விவசாயிகள் ஒரே வகை பயிா்களைச் சாகுபடி செய்வதைக்காட்டிலும் மாற்றுப் பயிா்களிலும் ஆா்வம் செலுத்த வேண்டும். நெல் அதிகளவில் சாகுபடி செய்யும்போது, அறுவடைக்குப் பிறகு அவற்றை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது.
நெல்லுக்கு விலை கிடைப்பதைப் போல பயறு வகைகள், எண்ணெய் வித்துப் பயிா்களுக்கும் நல்ல விலை கிடைத்து வருகிறது. ஆகவே, பாசிப்பயறு, உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளையும், எள், நிலக்கடலை ஆகிய எண்ணெய் வித்து பயிா்களையும் பயிரிட வேண்டும். நிகழ் ஆண்டில் பயறு வகைகள் சாகுபடி பரப்பை கூடுதலாக 600 ஹெக்டேருக்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.