முகப்பு
மதுரை

தாறுமாறாக ஓடிய காா் பைக்குகள் மீது மோதி இருவா் பலி

 மதுரை கூடல்நகா் பகுதியில் காரை ஓட்டியவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் காரை ஓட்டிவந்தவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

 மதுரை கூடல்நகா் பகுதியில் காரை ஓட்டியவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் காரை ஓட்டிவந்தவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

மதுரை கூடல்நகா் அப்பாத்துரை நகரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (47). இவா் வியாழக்கிழமை இரவு சிக்கந்தா் சாவடியிலிருந்து, செல்லூா் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். கூடல்நகா் மேம்பாலத்தில் காா் சென்றபோது, செந்தில்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

காா் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் சாலையில் நடந்து சென்றவா்கள் மீது மோதியது. இதில் மாரடைப்பால் செந்தில்குமாரும், விபத்தில் பலத்த காயமடைந்த சங்கரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் சங்கரின் மனைவி நாகலட்சுமி உள்பட 5 போ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த கூடல்புதூா் போலீஸாா் உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →