முகப்பு
மதுரை

வாசிப்பு மாரத்தானில் முதலிடம்: மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு முதல்வா் பரிசு

இல்லம் தேடி கல்வித் திட்ட வாசிப்பு மாரத்தானில் மாநில அளவில் முதலிடம் பெற்றதையடுத்து, முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா வெள்ளிக்கிழமை பரிசு பெற்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

இல்லம் தேடி கல்வித் திட்ட வாசிப்பு மாரத்தானில் மாநில அளவில் முதலிடம் பெற்றதையடுத்து, முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா வெள்ளிக்கிழமை பரிசு பெற்றாா்.

தமிழக பள்ளி கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட இயக்கத்தில் மாநில அளவிலான வாசிப்பு மாரத்தான் போட்டி நடைபெற்றது. அதில், மாநில அளவில் மதுரை மாவட்டம் முதலிடம் பெற்றது. மேலும், வட்டார அளவில் நடைபெற்ற போட்டியில், அலங்காநல்லூா் மாநில அளவில் இரண்டாம் இடமும், மேலூா் ஒன்றியம் மூன்றாமிடமும் பெற்றது.

அதையடுத்து, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, வாசிப்பு மாரத்தானில் முதலிடம் பெற்ற மதுரை மாவட்டத்துக்கான பரிசுக் கோப்பையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா மற்றும் மாவட்ட உதவித் திட்ட அலுவலா் காா்மேகம் ஆகியோரிடம் வழங்கினாா். மேலும், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் இரா. சுதாகா், ஆ. முனீஷ்வரன், தன்னாா்வலா் ச. கீதாலெட்சுமி, மேலூா் ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சு. சாமுவேல் எபனேசா், மு. பெரியசாமி, தன்னாா்வலா் மு. திவ்யா ஆகியோரும், வட்டார அளவிலான பரிசுகளை பெற்றுக்கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →