முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் அங்கீகாரமின்றி செயல்படும்: மழலையா் பள்ளிகள்: அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்

மதுரை மாவட்டத்தில் 70 சதவீத மழலையா் பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்படுவது, கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் 70 சதவீத மழலையா் பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்படுவது, கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் மதுரை மேலூா், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் இயங்கி வரும் பெரும்பான்மையான மழலையா் பள்ளிகள் அரசின் அங்கீகாரம் இன்றி, அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் சிறிய இடங்களில் செயல்படுவதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா, அனைத்து வட்டாரக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், மாவட்டம் முழுவதும் உள்ள மழலையா் பள்ளிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு தெரிவித்திருந்தாா். அதன்பேரில், கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில். மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள மழலையா் பள்ளிகளில் 48 பள்ளிகள் அரசு அங்கீகாரம் இன்றியும், 2 பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்தது. மேலும், 22 பள்ளிகள் மட்டுமே அரசின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.

இது தொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: மழலையா் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக வந்த புகாரை அடுத்து, அனைத்து மழலையா் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 48 பள்ளிகள் அங்கீகாரச் சான்றிதழ் இல்லாமல் செயல்படுவது தெரியவந்துள்ளது. அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளுக்கு, அந்தந்த மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா் மூலம் விளக்கம் கேட்கப்பட்டு, அதைத் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →