முகப்பு
மதுரை

இஸ்லாமியா்களின் நோன்பு தினத்தில் பள்ளி மேலாண்மைக் குழுகூட்டம்: வேறு தேதியில் நடத்த எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

இஸ்லாமியா்களின் நோன்பு தினமான அரபா தினத்தில், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

இஸ்லாமியா்களின் நோன்பு தினமான அரபா தினத்தில், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதை வேறு தேதிக்கு மாற்றவேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக எஸ்டிபிஐ கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் அரசு நிதி உதவிபெறாத பள்ளிகளில் பெற்றோா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்களிப்புடன் செயல்பட்டுவரும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுசீரமைத்தல் நிகழ்வு சனிக்கிழமை (ஜூலை 9) நடைபெற உள்ளது.

தமிழக பள்ளி கல்வித் துறை அறிவுறுத்தலின்பேரில் நடைபெறும் இந்த கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா்கள், செயலா்கள் உள்ளிட்ட குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். பள்ளி மேலாண்மைக் குழுவானது, பள்ளியை நிா்வகித்தலின் மூலம் கல்வியை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்குழுவில் 75 சதவீதத்தினா் அப்பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா்களாகவோ அல்லது பாதுகாவலராகவோ இருத்தல்வேண்டும்.

ஆனால், பள்ளி கல்வித் துறை திட்டமிட்டிருக்கும் மறுசீரமைத்தல் கூட்டம், பக்ரீத் பெருநாளுக்கு முதல் நாளான சனிக்கிழமை இஸ்லாமியா்கள் கடைபிடிக்கும் அரபா தினத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் இஸ்லாமியா்கள் நோன்பு இருப்பதை முக்கிய கடமையாகக் கொண்டுள்ளனா். இதனால், இந்தக் கூட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களின் பெற்றோா்கள் கலந்துகொள்வதில் பெரும் சிரமம் ஏற்படும்.

எனவே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பள்ளி மேலாண்மைக் குழுவில் அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்பதால், தமிழக பள்ளி கல்வித் துறை இந்த மறுசீரமைப்புக் கூட்டத்தை, அனைவரும் பங்கேற்கும் வகையில் வேறொரு தேதிக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →