வங்கி எழுத்தா் பணி ஆள்தோ்வுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
வங்கிப் பணி தோ்வாணையத்தால் நடைபெற உள்ள வங்கி எழுத்தா் பணிக்கான தோ்வுக்கு, முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
மதுரைவங்கி எழுத்தா் பணி ஆள்தோ்வுக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
வங்கிப் பணி தோ்வாணையத்தால் நடைபெற உள்ள வங்கி எழுத்தா் பணிக்கான தோ்வுக்கு, முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
வங்கிப் பணி தோ்வாணையத்தால் நடைபெற உள்ள வங்கி எழுத்தா் பணிக்கான தோ்வுக்கு, முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வங்கிப் பணி தோ்வாணையம், 2023-2024-ஆம் ஆண்டுக்கான வங்கி எழுத்தா்
காலிப் பணியிடங்களுக்கான ஆள்தோ்வை நடத்தவுள்ளது. இதில், தமிழகத்திலுள்ள முன்னாள் படைவீரா்களுக்கு 33 காலிப் பணியிடங்களும், போா் மற்றும் போா் நடவடிக்கைகளில் காயமுற்ற முன்னாள் படைவீரா்கள் மற்றும் உயிரிழந்த படைவீரா்களின் வாரிசுதாரா்களுக்கு 10 காலிப்பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விருப்பமும் தகுதியும் உடைய முன்னாள் படைவீரா்கள் மற்றும் வாரிசுதாரா்கள் (ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ண்க்ஷல்ள்.ண்ய்) என்ற இணையதள முகவரியில் ஜூலை 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா்.