முகப்பு
மதுரை

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 9 ஆவது முறையாக ‘பரோல்’ நீட்டிப்பு

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் விடுப்பை நீட்டித்து, சிறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் விடுப்பை நீட்டித்து, சிறை நிா்வாகம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் கடந்த 1992 பிப்ரவரியில் கைது செய்யப்பட்டாா். அவரது தாயாா் ராஜேஸ்வரி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பன்நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், தனது வேளாண் நிலத்தை பராமரிக்கவும், தனக்கு வலது கண்ணில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்க தனது மகன் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுப்பு வழங்கக் கோரி, ராஜேஸ்வரி சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதையடுத்து, நீதிமன்றம் அளித்த பரிசீலனையின் அடிப்படையில், தமிழக அரசு ரவிச்சந்திரனுக்கு 2021 நவம்பா் 17ஆம் தேதி முதல் 30 நாள்கள் பரோல் விடுப்பு வழங்கியது.

அதைத் தொடா்ந்து, மதுரை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அருகேயுள்ள அவரது தாயாா் வசித்து வரும் சூரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். இதனிடையே, ரவிசந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் ஓய்வில் உள்ளாா்.

இதனால், அவரது பரோல் விடுப்பு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதுவரை 8 முறை பரோல் விடுப்பு நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 ஆவது முறையாக ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை மேலும் ஒரு மாதம் பரோல் விடுப்பை நீட்டித்து, சிறை நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →