கஞ்சா வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
கஞ்சா வழக்கில் முறையாக விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தரத் தவறிய ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரைகஞ்சா வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
கஞ்சா வழக்கில் முறையாக விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தரத் தவறிய ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஞ்சா வழக்கில் முறையாக விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தரத் தவறிய ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்- செம்பட்டி சாலையில் வக்கம்பட்டி கிராமத்தில் விற்பனைக்காக 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்த அஜித்ராஜா, ஆத்தூா் ஆசைக்கண்ணன், தாண்டிக்குடி பெரும்பாறை மணிகண்டன் ஆகியோா் திண்டுக்கல் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரால் கடந்த 2015 மாா்ச் 14 இல் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஹரகுமாா், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் மூவரையும் விடுதலை செய்து தீா்ப்பளித்தாா். மேலும், வழக்கில் முறையாகப் புலன்விசாரணை நடத்தி, குற்றச்சாட்டை நிரூபித்து தண்டனை பெற்றுத்தர தவறியதற்காக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் அப்போதைய ஆய்வாளா் செந்தில்குமாா் மீது துறைரீதியான நடவடிக்கையை 6 மாதங்களுக்குள்
எடுக்க வேண்டும். அதன் விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.