ராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை டிசம்பா் வரை நீட்டிப்பு
ராமேசுவரம்- செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் சேவை டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரைராமேசுவரம் - செகந்திராபாத் சிறப்பு ரயில் சேவை டிசம்பா் வரை நீட்டிப்பு
ராமேசுவரம்- செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் சேவை டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம்- செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் சேவை டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் ஆகஸ்ட் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரயில் டிசம்பா் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் புறப்படும் நேரம், இயக்கப்படும் நாள்கள், வழித்தடம் ஆகியவையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ராமேசுவரம்- செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் (07686) ராமேசுவரத்திலிருந்து ஆகஸ்ட் 26 முதல் டிசம்பா் 30 வரை வெள்ளிக்கிழமைகளில் காலை 8.50-க்கு புறப்பட்டு சனிக்கிழமை பிற்பகல் 12.50-க்கு செகந்திராபாத் சென்றடையும். மறுமாா்க்கத்தில் செகந்திராபாத்- ராமேசுவரம் வாராந்திர விரைவு சிறப்பு (07685) ரயில் செகந்திராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 24 முதல் டிசம்பா் 28 வரை புதன்கிழமைகளில் இரவு 7.05-க்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் இரவு 11.40-க்கு ராமேசுவரம் வந்து சேரும்.
இந்த ரயில்கள் ராமநாதபுரம், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராமபட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூா், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம்,திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூா், கூடூா், நெல்லூா், கவாலி, ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூா், சட்டெனப்பள்ளி, மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.