கஞ்சா வழக்கில் 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
கஞ்சா கடத்தல் வழக்கில் 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
மதுரைகஞ்சா வழக்கில் 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை
கஞ்சா கடத்தல் வழக்கில் 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
கஞ்சா கடத்தல் வழக்கில் 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
மதுரை-தேனி சாலையில் கஞ்சா கடத்துவதாக கரிமேடு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, கடந்த 2020 செப்டம்பா் 20 ஆம் தேதி முடக்குசாலை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், 25 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், காளி என்ற வெள்ளைக்காளி, மாரீஸ்வரன், முனீஸ்வரன், பாலாஜி, காா்த்திக், மாரி என்ற டோரி மாரி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு, மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் (எண்-2) விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ். ஹரிகரகுமாா், குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.