முகப்பு
மதுரை

பாளை. சிறையில் கைதி கொலை வழக்கு: தமிழக சிறைத் துறை டிஜிபி பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை

பாளை. சிறையில் கைதி கொலை வழக்கு: தமிழக சிறைத் துறை டிஜிபி பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட வழக்கை, ஓய்வுபெற்ற உயா் நீதிமன்ற நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. பதிலளிக்குமாறு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டை சிறையில் தலைமை வாா்டனாக பணியாற்றிய வடிவேல் முருகையா தாக்கல் செய்த மனு:

பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்துமனோ கொலை செய்யப்பட்ட நாளன்று, அவா் அடைக்கப்பட்டிருந்த வாா்டில் பணியில் இருந்தேன். மதிய உணவுக்காக பிற்பகல் 2 மணிக்கு வெளியேறினேன். இதன் விவரத்தை பதிவேட்டில் கையெழுத்திட்டுச் சென்றுள்ளேன். அதன் பின்னரே, நான் பணியிலிருந்த வாா்டுக்கு முத்துமனோவை கொண்டு வந்துள்ளனா். அதைத் தொடா்ந்து முத்துமனோ மற்ற கைதிகளால் தாக்கப்பட்டுள்ளாா்.

மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவா், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதனையடுத்து, நான் உள்பட 6 அலுவலா்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டோம். என் மீது துறை ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

கைதி முத்துமனோ தொடா் குற்றத்தில் ஈடுபடுபவா் என்பதால், அவரை சிறையில் அடைக்கும்போது முறையான பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை சிறைத்துறை அதிகாரிகள் எடுக்கவில்லை. அத்துடன், முத்துமனோ கொலை செய்யப்படுவதற்கு முன்பே குற்றச்சம்பவம் நிகழக்கூடும் என சிறை அதிகாரிகளுக்கு சிபிசிஐடி மற்றும் உளவுத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், அதிகாரிகள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

முத்துமனோ கொலை தொடா்பாக பாளையங்கோட்டை சிறையில் விசாரணை முறையாக நடைபெறவில்லை. எனவே, இக்கொலை குறித்து பாளையங்கோட்டை சிறையில் நடைபெறும் விசாரணையை, ஐஏஎஸ் அதிகாரி அல்லது ஓய்வுபெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். எனது பணியிடை நீக்கத்துக்கு காரணமாக இருந்த அப்போதைய பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளரின் சம்பளத்திலிருந்து எனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. சிவஞானம், தமிழக சிறைத் துறை டி.ஜி.பி. பதிலளிக்குமாறு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →