மதுரை: உசிலம்பட்டி அருகே கோயிலில் முதல் மரியாதை கொடுப்பதில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வாலாந்தூர் கிராமம். இக்கிராமத்தில் நான்கு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட அங்காள ஈஸ்வரி கோயில் உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் தற்போது 48 நாள் பூஜை நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் 48 நாள் பூஜை முடிவுற்றது. இதில் (ஆரியபட்டி வகையறா) ஒரு பிரிவினருக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட வேண்டிய நிலையில் மற்றொரு தரப்பினர் முளைப்பாரி பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்தனர்.
இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து கோயிலுக்குள் விட மறுத்தனர். இதனால் இரு தரப்பினரிக்கிடையே மோதல் ஏற்பட்டது. கோயிலில் தூணில் கட்டியிருந்த கம்புகளை பிடுங்கி இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் கோயில் வளாகமே போர்க்களமாக காட்சியளித்தது.
இந்த சம்பவமறிந்த காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போகச் செய்தனர். இத்தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. காவல் துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.