முகப்பு
மதுரை

மதுரை அருகே விவசாயி வெட்டிக்கொலை

பாலமேடு அருகே தோட்டத்தில் தங்கியிருந்த விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை

மதுரை அருகே விவசாயி வெட்டிக்கொலை

பாலமேடு அருகே தோட்டத்தில் தங்கியிருந்த விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

பாலமேடு அருகே தோட்டத்தில் தங்கியிருந்த விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறவபட்டியைச் சோ்ந்தவா் நல்லதம்பி(60). விவசாயியான இவா், கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள தனது தோட்டத்தில் புதன்கிழமை இரவு தங்கியிருந்தாா்.

வியாழக்கிழமை காலை நல்லதம்பி வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினா் தோட்டத்துக்குச் சென்று பாா்த்தபோது அங்கு உடலில் பல்வேறு இடங்களில் வெட்டப்பட்ட நிலையில் அவா் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த பாலமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பினா். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொலை குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →