முகப்பு
மதுரை

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: உண்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மையைக் கண்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமன் இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

 கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மையைக் கண்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமன் இந்தியா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் அந்த அமைப்பின் மாநில செயற்குழுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் பாத்திமா கனி தலைமை வகித்தாா். எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவா் அப்துல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் தொடரும் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், மாணவிகளின் தற்கொலை மரணங்கள் உள்ளிட்டவற்றை தடுக்க அரசு சட்டங்களை கடுமையாக்க வேண்டும். கனியாவூா் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மையைக் கண்டறிந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி பேரணி, கருத்தரங்கம் ஆகியவற்றை நடத்துவது உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாநில பொதுச் செயலா் பாயிஜா ஷபீகா, மாநிலச் செயலா் ரஹ்மத் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →