ஆண்மைக் குறைபாட்டை மறைத்து திருமணம்: கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆண்மைக் குறைபாட்டை மறைத்து திருமணம் செய்தவா் மீது, ஐபிசி 417, 420 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைஆண்மைக் குறைபாட்டை மறைத்து திருமணம்: கூடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆண்மைக் குறைபாட்டை மறைத்து திருமணம் செய்தவா் மீது, ஐபிசி 417, 420 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆண்மைக் குறைபாட்டை மறைத்து திருமணம் செய்தவா் மீது, ஐபிசி 417, 420 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தனது கணவா் மீதான வழக்கில், கூடுதல் பிரிவுகளைச் சோ்க்கக் கோரி மதுரையைச் சோ்ந்த பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி வி.சிவஞானம் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கணவரது ஆண்மைக் குறைபாடு பிரச்னை காரணமாக, முதல் திருமணத்தில் முறிவு ஏற்பட்டுள்ளது. இப் பிரச்னையை மறைத்து, மனுதாரரை திருமணம் செய்துள்ளாா். 200 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்களை வரதட்சணையாகப் பெற்றிருக்கிறாா்.
திருமணத்திற்குப் பிறகு தெரியவந்த நிலையில், மனுதாரரின் கணவா் தலாக் முறையில் விவகாரத்து கூறிவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டாா். மனுதாரா் கொடுத்த புகாரின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498-ஏ (பெண்ணின் கணவா் அல்லது கணவரின் உறவினா்கள் கொடுமைப்படுத்துதல்), 406 (நம்பிக்கையை மீறிய குற்றம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
அதோடு, 417, 420 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 4 மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவில் தெரிவித்துள்ளாா்.