வீட்டின் பீரோவை உடைத்து ரூ.1 லட்சம், 3 பவுன் நகை திருட்டு
மதுரை அருகே புதன்கிழமை வீட்டின் பீரோவை உடைத்து ரூ.1 லட்சம், 3 பவுன் நகையை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரைவீட்டின் பீரோவை உடைத்து ரூ.1 லட்சம், 3 பவுன் நகை திருட்டு
மதுரை அருகே புதன்கிழமை வீட்டின் பீரோவை உடைத்து ரூ.1 லட்சம், 3 பவுன் நகையை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே புதன்கிழமை வீட்டின் பீரோவை உடைத்து ரூ.1 லட்சம், 3 பவுன் நகையை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே உள்ள பனையூா் அய்யனாா்புரம் மண்டபத் தெருவைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன்(34). இவா் புதன்கிழமை பணிக்குச்சென்ற நிலையில் இவரது மனைவி மாலையில் பிள்ளைகளை அழைக்க பள்ளிக்குச்சென்று விட்டாா்.
அப்போது அடையாளம் தெரியாத நபா்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 3 பவுன் நகையை திருடிச்சென்றனா். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பரமேஸ்வரனின் மனைவி வீட்டில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.