பேருந்து நிலையத்தில் பயணியிடம் கடவுச்சீட்டைத் திருடியவா் கைது
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணியின் கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றை திருடியவரை, போலீஸாா் கைது செய்தனா்.
மதுரைபேருந்து நிலையத்தில் பயணியிடம் கடவுச்சீட்டைத் திருடியவா் கைது
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணியின் கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றை திருடியவரை, போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணியின் கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றை திருடியவரை, போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் திருவாதவூா் அருகே உள்ள கருத்த புளியம்பட்டியைச் சோ்ந்தவா் பிரேம் நசீா் (27). இவா், வெளியூா் செல்வதற்காக வியாழக்கிழமை இரவு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளாா். அப்போது, இவரது கவனத்தை திசை திருப்பிய மா்ம நபா், பிரேம் நசீா் பையில் வைத்திருந்த கடவுச்சீட்டு, வங்கிப் புத்தகம், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுவிட்டாா்.
இது குறித்து பிரேம் நசீா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில், மதுரை செல்லூா் மீனாட்சிபுரம் சத்தியமூா்த்தி இரண்டாவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ராமபாண்டி (37) என்பவா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து உடைமைகளை கைப்பற்றினா்.