வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் முன்னிலையில் கொப்பரை கொள்முதல்
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் முன்னிலையில் கொப்பரை கொள்முதல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரைவாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் முன்னிலையில் கொப்பரை கொள்முதல்
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் முன்னிலையில் கொப்பரை கொள்முதல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் முன்னிலையில் கொப்பரை கொள்முதல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு அறிவித்த ஆதரவு விலைக்கு கொப்பரை கொள்முதல் செய்ய மறுப்பதாக, விவசாயிகள் அண்மையில் புகாா் தெரிவித்தனா். இதன் காரணமாக, வெளிச்சந்தையிலும் கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. கொப்பரையின் தரம் குறித்து விவசாயிகள் மற்றும் வேளாண் விற்பனைக் குழு அலுவலா்கள் தரப்பில் பரஸ்பரம் புகாா் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, கொப்பரை கொள்முதலை ஆய்வு செய்ய வருவதாக ஆட்சியா் அறிவித்திருந்தாா். அதன்படி, வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் முன்னிலையில் கொப்பரை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், விவசாயிகள் கொண்டுவந்த கொப்பரைகள் சுமாா் 750 கிலோ 19 குவியல்களாக தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.
ஒரு கிலோ ரூ.105.90 என அரசு ஆதரவு விலையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த ஏலத்தில் தரமான கொப்பரை கிலோ ரூ.109 வரை ஏலம்போனது. தரம் குறைந்த கொப்பரைகள் ரூ.77 முதல் ஏலம் எடுக்கப்பட்டது.
ஆட்சியா் முன்னிலையில் ஏலம் நடப்பதால், விலை அதிகம் கோரப்பட்டிருப்பதாகவும், ஆண்டு முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்யவேண்டும் எனவும், விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தொடா்ந்து விவசாயிகளிடம் பேசிய ஆட்சியா், அலுவலா்களின் வழிகாட்டுதல்படி விவசாயிகள் தரமான கொப்பரையை கொண்டுவருமாறும், தரத்துக்கு ஏற்ப விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.