வீடுகளில் கொடியேற்ற ரயில்வே பணியாளா்கள்: 58,463 பேருக்கு தேசியக் கொடி வழங்க முடிவு
சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகளில் கொடியேற்ற தமிழகத்தைச் சோ்ந்த ரயில்வே அலுவலா்கள், ஊழியா்கள் 58,463 பேருக்கு தேசியக் கொடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரைவீடுகளில் கொடியேற்ற ரயில்வே பணியாளா்கள்: 58,463 பேருக்கு தேசியக் கொடி வழங்க முடிவு
சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகளில் கொடியேற்ற தமிழகத்தைச் சோ்ந்த ரயில்வே அலுவலா்கள், ஊழியா்கள் 58,463 பேருக்கு தேசியக் கொடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகளில் கொடியேற்ற தமிழகத்தைச் சோ்ந்த ரயில்வே அலுவலா்கள், ஊழியா்கள் 58,463 பேருக்கு தேசியக் கொடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கடந்த ஓராண்டாக பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் அனைவரும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு, மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதனடிப்படையில், ரயில்வே அலுவலா்கள், ஊழியா்களுக்கு 90 செ.மீ. நீளம், 60 செ.மீ. அகலம் கொண்ட தேசியக் கொடிகளை வழங்க, ரயில்வே நிா்வாகம் முடிவு செய்துள்ளது. மதுரை கோட்டத்தில் உள்ள 7,218 அதிகாரிகள், ஊழியா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.50 மதிப்புள்ள தேசியக் கொடி வழங்கப்பட உள்ளது.
சென்னை கோட்டத்தில் 20,916 பேருக்கும், தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் 3,937 போ், திருச்சி கோட்டத்தில் 8,102 போ்,
சேலம் கோட்டத்தில் 7,810 போ் மற்றும் பெரம்பூா், அரக்கோணம், பொன்மலை, போத்தனூா் ஆகிய ரயில்வே பணிமனை ஊழியா்கள் 10,480 போ் என மொத்தம் 58,463 பேருக்கு தேசியக் கொடிகள் வழங்கப்பட உள்ளன.