முகப்பு
மதுரை

மாநகராட்சியில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பொறியியல் பிரிவு ஊழியா் சங்கம் கண்டன ஆா்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வலியுறுத்தி, மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் சி.எம். மகுடீஸ்வரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலா் ஆ. செல்வம் தொடக்கிவைத்துப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநகராட்சி ஊழியா்களின் ஊதியத்தில் ஜிபிஎஃப், காப்பீடு மற்றும் கூட்டுறவுச் சிக்கன நாணய சங்கத்துக்கு பிடித்தம் செய்யும் தொகைகளை அந்தந்த கணக்கு தலைப்புகளில் அந்தந்த மாதத்தில் செலுத்தவேண்டும். ஊழியா்கள் ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்து ஓய்வூதியப் பலன்களையும் வழங்க வேண்டும். மாநகராட்சியில் ஒப்பந்த முறையை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் பணி அமா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பங்கேற்றனா்.

இதில், மாநகராட்சி கூட்டுறவு சங்க தலைவா் கே. கண்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. நீதிராஜா சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் பொதுச் செயலா் மு. தாமோதரன் நிறைவுரையாற்றினாா்.

முன்னதாக, மதுரை மாநகராட்சி, பொறியியல் பிரிவு பணியாளா்கள் சங்க துணைச் செயலா் எஸ். பழனிக்குமாா் வரவேற்றாா். மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளா் சங்க பொருளாளா் கே.டி. துரைக்கண்ணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →