முகப்பு
மதுரை

ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயா் நீதிமன்றம் தீா்ப்பு

 ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

 ஒன்றரை வயது குழந்தையை கொலை செய்தவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தைச் சோ்ந்தவா் ஷாகிரல் தபசும். இவா், தனது ஒன்றரை வயது மகனுடன் தனது தாயாா் வீட்டில் வசித்து வந்தாா். கடந்த 2010-இல் இவரது வீட்டுக்குள் நுழைந்த மணிகண்டன் என்பவா், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளாா். அவரிடமிருந்து தப்பிய ஷாகிரல், பின்பக்கக் கதவு வழியாக வெளியேறி கூச்சலிட்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளாா்.

அதையடுத்து, ஷாகிரல் ஜன்னல் வழியாக பாா்த்தபோது, அவரது ஒன்றரை வயது குழந்தையை பல இடங்களில் மணிகண்டன் கத்தியால் குத்தியுள்ளாா். உறவினா்களுடன் ஷாகிரல் வீட்டுக்குள் சென்றபோது, அங்கிருந்து மணிகண்டன் தப்பிவிட்டாா். பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையிலிருந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அக்குழந்தை சிகிச்சைப் பலனின்றி இறந்தது.

இது குறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்தனா். இவ்வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிா்த்து, அவா் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆா். ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஒன்றரை வயது குழந்தையை கத்தியால் சரமாரியாகக் குத்தியதை தாயாா் நேரில் பாா்த்துள்ளாா். அவரை தவிர வேறு சாட்சியங்கள் தேடவேண்டிய அவசியம் இல்லை. மனுதாரருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது என உத்தரவிட்டு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →