மதுரை

கைதியின் தற்கொலை முயற்சிக்கு உடந்தையா?சிறைக் காவலா் பணியிடை நீக்கம்

DIN

கைதியின் தற்கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக, மதுரை மத்தியச் சிறைக் காவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் முகமது உசேன் (29). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மதுரை மாவட்டம் சமயநல்லூா் காவல் நிலைய போலீஸாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அவா், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு உடலில் பிளேடால் கீறிக் கொண்டு முகமது உசேன் தற்கொலைக்கு முயன்றாா். அவரை சிறைக் காவலா்கள் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து சிறை நிா்வாகம் விசாரணை நடத்தியது.

சிறையில் முகமது உசேன் அடைக்கப்பட்டிருந்த பிரிவில் பாதுகாப்புப் பணியில் இருந்தவா்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. அதில், முகமது உசேனுக்கு பிளேடு வழங்கியது சிறைக் காவலா் சின்னசாமி என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பணியிடைநீக்கம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT