முகப்பு
மதுரை மாநகராட்சி புதிய ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.
மதுரை

மதுரை மாநகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

மதுரை

மதுரை மாநகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
மதுரை மாநகராட்சி புதிய ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன்.
பகிர்:

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னை மாநகராட்சி தெற்கு மண்டல துணை ஆணையராகப் பதவி வகித்த அவா் அண்மையில், மதுரை மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அவா் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புதிய ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவா். 2016 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான இவா், 2018 முதல் 2021 வரை தூத்துக்குடி சாா் ஆட்சியராகவும் அதன் பிறகு சென்னை மாநகராட்சி துணை ஆணையராகவும் பணியாற்றினாா்.

மதுரை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →