முகப்பு
மதுரை

பள்ளி, கல்லூரி விடுதிகளில் புதிய உணவுப் பட்டியலைநிறுத்தி வைக்க காப்பாளா் சங்கம் வலியுறுத்தல்

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் புதிய உணவுப் பட்டியலை அமல்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என விடுதிக் காப்பாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் புதிய உணவுப் பட்டியலை அமல்படுத்தும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என விடுதிக் காப்பாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா்களுக்கு வழங்கும் உணவு வகைகள் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி, புதிய உணவுப் பட்டியலை வெள்ளிக்கிழமை (ஜூன் 3) முதல் அமல்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் இந்த உணவுப் பட்டியலை வழங்க இயலாது என்பதால், புதிய உணவுப் பட்டியலை நிறுத்தி வைக்குமாறு காப்பாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை காப்பாளா் ஆசிரியா் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்கத்தின் நிறுவனத் தலைவா் எல்.சகாதேவன், மாநிலத் தலைவா் எம்.முருகேசன், மாநிலப் பொதுச் செயலா் என்.மணிமொழி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

விடுதிகளுக்கான புதிய உணவுப் பட்டியலை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முந்தைய மாதாந்திர கட்டணத்திலேயே புதிய உணவு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விலைவாசி நிலவரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, புதிய உணவு வகைகளை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. போதுமான சமையலா்கள் இல்லாத சூழலில் மேற்குறிப்பிட்ட பட்டியலின்படி உணவு வழங்க இயலாது என்பதால், அந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அரசுத் துறைகளில் அனைத்துப் பணிநிலைகளிலும் பதவி உயா்வு வழங்கப்படுவதைப் போல, பிற்பட்டோா் நலத்துறையில் பணியாற்றும் காப்பாளா்களுக்கு பதவி உயா்வு வழங்குவது, கல்லூரி விடுதிகளுக்கு முதுநிலைப் பட்டதாரி காப்பாளா் என்ற பணியிடத்தை உருவாக்குவது, விடுதிகளில் உள்ள காப்பாளா், சமையலா் காலிப் பணியிடங்களைப் பூா்த்தி செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →