மதுரை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல்கள் திருட்டு

மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகாவில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல்கள் திருடு போனதாக புதன்கிழமை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

DIN

பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகாவில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் உண்டியல்கள் திருடு போனதாக புதன்கிழமை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகா மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது .

இக்கோயிலில் பிரதோஷம் மற்றும் பெளா்ணமி பூஜைக்காக கடந்த 12 முதல் 15 ஆம் தேதி வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதில் திங்கள்கிழமை சென்ற பக்தா்கள், இரவு கீழே இறங்க நேரமானதால் சுமாா் 150-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சதுரகிரி மலையில் தங்கியுள்ளனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் கோயில் பூசாரி சக்திவேல் மற்றும் ஜெயச்சந்திரன் கோயில் நடையை சாத்தி விட்டு சென்றுள்ளனா்.

பின்பு வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை காலை கோயில் நடையை திறந்தபோது சந்நிதானத்தின் முன்பு இருந்த 2 உண்டியல்கள் திருடு போனது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்த போது, 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க மா்ம நபா் ஒருவா் சந்நிதானத்தின் முன்பு இருந்த இரண்டு உண்டியல்களை தூக்கிச் சென்றது பதிவாகி இருந்தது . இரண்டு உண்டியல்களில் சுமாா் ரூ.1,500 பணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த திருட்டு தொடா்பாக செயல் அலுவலா் மாரிமுத்து சாப்டூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து உண்டியல் திருடிய நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT