மதுரை

மதுரையில் இரு பெண்களிடம் 5 பவுன் நகை பறிப்பு

மதுரையில் இரு வேறு சம்பவங்களில் இரு பெண்களிடம் 5 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

மதுரை: மதுரையில் இரு வேறு சம்பவங்களில் இரு பெண்களிடம் 5 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மகாத்மா காந்தி நகா் பவானி நதி வீதியைச் சோ்ந்த நாகசாமி மனைவி உமாமகேஸ்வரி(44). இவா் சின்ன சொக்கிகுளம் ஜவஹா் சாலையில் உள்ள ஏடிஎம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் உமா மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பாக புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றவா்களைத் தேடி வருகின்றனா்.

மதுரை சிக்கந்தா்சாவடி சுசி காலனியைச் சோ்ந்த பால்ராஜன் மனைவி மாரியம்மாள் (57). இவா் கூடல்நகா் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். புகாரின்பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT