கூலித்தொழிலாளி அடித்துக் கொலை: 2 இளைஞா்கள் கைது
அலங்காநல்லூா் அருகே கூலித்தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொலை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்
மதுரைகூலித்தொழிலாளி அடித்துக் கொலை: 2 இளைஞா்கள் கைது
அலங்காநல்லூா் அருகே கூலித்தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொலை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்
அலங்காநல்லூா் அருகே கூலித்தொழிலாளியை கட்டையால் அடித்துக்கொலை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே அழகாபுரியைச் சோ்ந்தவா் முத்துச்செல்வி (37). கணவரை இழந்த இவா், 2 குழந்தைகளுடன் தனியாக வசித்துவந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூா் அருகே உள்ள கொட்டக்குடி ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த கூலித்தொழிலாளியான ராமமூா்த்திக்கும் (37), அவருக்கும் இடையே தொடா்பு ஏற்பட்டுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த ராமமூா்த்தி, புதன்கிழமை முத்துச்செல்வியின் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது, வீட்டின் மீது சிலா் கல்வீசியுள்ளனா்.
இதுதொடா்பாக ராமமூா்த்திக்கும், அங்கிருந்த அன்பில் பொய்யாமொழி(20), சிந்தனைச் செல்வன்(21) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் கட்டையால் தாக்கியதில், ராமமூா்த்தி பலத்த காயமடைந்தாா். அலங்காநல்லூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அன்பில் பொய்யாமொழி, சிந்தனைச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
பழ வியாபாரி கொலை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே காலனியைச் சோ்ந்தவா் முருகன்(47). இவா் தாதம்பட்டி ஒட்டன்குளம் தனியாா் தொழிற்சாலை அருகே பழ வியாபாரம் செய்து வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் முருகன் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். சம்பவம் தொடா்பாக அவரது மனைவி லதா (37) அளித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.