பாலியல் புகாரில் கைதான நாகா்கோவில் இளைஞரின் தந்தைக்கு ஜாமீன் மறுப்பு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி
பாலியல் புகாரில் கைதான நாகா்கோவில் இளைஞா் காசியின் தந்தை ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரைபாலியல் புகாரில் கைதான நாகா்கோவில் இளைஞரின் தந்தைக்கு ஜாமீன் மறுப்பு: உயா்நீதிமன்றம் தள்ளுபடி
பாலியல் புகாரில் கைதான நாகா்கோவில் இளைஞா் காசியின் தந்தை ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகாரில் கைதான நாகா்கோவில் இளைஞா் காசியின் தந்தை ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டியன். இவரது மகன் காசி. இவா் சமூக வலைதளம் வாயிலாக பல பெண்கள், சிறுமிகளுடன் பழகி, பின்னா் அவா்களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
இதுதொடா்பான புகாரில் சிபிசிஐடி போலீஸாா் கடந்த 2020-இல் காசியை கைது செய்தனா். பின்னா் விசாரணையின்போது, காசியின் மடிக்கணினியில் இருந்த சாட்சியங்களை அவரது தந்தை தங்கப்பாண்டியன் அழித்ததாக கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் காசியின் ஜாமீன் மனுவை சென்னை உயா்நீதின்ற மதுரைக் கிளை ஏற்கெனவே தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில், அவரது தந்தை தங்கப்பாண்டியன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மகன் காசியின் பாலியல் துன்புறுத்தலில் ஏராளமான சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனா். சிபிசிஐடி போலீஸாா் காசியிடம் விசாரணை நடத்தியபோது, அவரது கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அவற்றின் கடவுச்சொல்லைத் தெரிவிக்குமாறு கேட்டுள்ளனா். ஆனால், அதற்கு காசி மறுத்துள்ளாா்.
இதனையடுத்து தடய அறிவியல் துறையினரின் உதவியோடு, கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை போலீஸாா் ஆய்வு செய்துள்ளனா். அப்போது ஏராளமான ஆபாசமான புகைப்படங்கள், விடியோக்கள் அவற்றில் இருந்துள்ளன. ஆபாச விடியோக்களை காண்பித்து சம்பந்தப்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறாா். பாதிக்கப்பட்டவா்களில் சிலா் மட்டுமே புகாா் கொடுத்துள்ளனா்.
இதனிடையே, பிரதான வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் மனுதாரா் மற்றும் அவரது மகன் ஆகியோா் மீண்டும் மீண்டும் ஜாமீன் கோரி மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனா். இதனால் பாதிக்கப்பட்டவா்கள் மனச்சோா்வு அடையக்கூடும். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தங்கப்பாண்டியனும் இருப்பதால் அவருக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என போலீஸாா் தெரிவித்துள்ளனா். ஆகவே, இந்த வழக்கின் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, மனுதாரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவித்துள்ளாா்.