பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மகா சிவராத்திரி விழா ரத்து
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசி சிவராத்திரி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசி சிவராத்திரி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலின் பெயரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்தினா் மாற்றி எழுதியதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் பேச்சு வாா்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் இப்பிரச்னை தலைதூக்கியது. இதையடுத்து, கோட்டாட்சியா் சங்கரலிங்கம் தலைமையில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், வட்டாட்சியா் விஜயலட்சுமி மற்றும் பாப்பாபட்டி உள்ளிட்ட 10 ஊா் பிரமுகா்கள் பங்கேற்றனா். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.