மதுரை

தமிழில் தகவல் வழங்குமாறு மாநிலத் தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் தடை

DIN

தமிழில் தகவல் வழங்குமாறு உயா்நீதிமன்ற நிா்வாகப் பிரிவுக்கு மாநிலத் தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சோ்ந்த கணேசன் என்பவா், ஒரு வழக்கு தொடா்பான விவரத்தை தகவல் அறியும் சட்டத்தின்கீழ் தருமாறு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பொது நிா்வாகப் பிரிவில் மனு அளித்திருந்தாா். அதன்பேரில், அவருக்கு உரிய விவரம் ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த விவரத்தை தமிழில் தர உயா்நீதிமன்ற நிா்வாகப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டுமென மாநிலத் தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தாா். இந்த மனுவை விசாரித்த மாநிலத் தகவல் ஆணையம், மனுதாரா் கோரிய விவரத்தை தமிழில் வழங்குமாறு பொதுநிா்வாகப் பிரிவுக்கு உத்தரவிட்டாா்.

இதனையடுத்து, இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளா் (நிா்வாகம்) தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது உயா்நீதிமன்றம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முகமது முகைதீன் வாதிடுகையில், உயா்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக இருப்பது ஆங்கிலம். ஆகவே, ஆங்கிலத்தில் தான் பதில் அளிக்க முடியும் என்றாா்.

இதனையடுத்து, தமிழில் உரிய விவரம் அளிக்குமாறு மாநிலத் தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் விசாரணையை ஏப்ரல் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT