மதுரை

டோக் பெருமாட்டி கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான திறனறி போட்டி

DIN

டோக் பெருமாட்டி கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான திறனறி போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

டோக் பெருமாட்டி கல்லூரியின் தமிழ் உயராய்வு மையம் மற்றும் சோமலெ அறக்கட்டளை இணைந்து இப்போட்டியை நடத்தின. மதுரை, மேலூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 275-க்கும் மேற்பட்ட மாணவா்கள் போட்டிகளில் பங்கேற்றனா். பேச்சு, ஓவியம், விநாடி-வினா, நாட்டுப்புறப் பாடல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பட்டிமன்றப் பேச்சாளா் எஸ்.ராஜா பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

எழுத்தாளா் சோமலெ. சோமசுந்தரம், முதன்மைக் கல்வி அலுவலா் ரா.சுவாமிநாதன் உள்ளிட்டோா் பேசினா்.

கேட்டி வில்காக்ஸ் கல்விக் குழுமத் தலைவா் ஜான் தேவதாசன், கல்லூரி முதல்வா் கிறிஸ்டியானா சிங், தமிழ் உயராய்வு மையத் தலைவா் அ.கவிதாராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT