மதுரை

சரக்கு ரயில் போக்குவரத்து: மதுரை கோட்ட வருவாய் அதிகரிப்பு

DIN

மதுரை ரயில்வே கோட்டத்தில் ஏப்ரலில் சரக்குப் போக்குவரத்து வருவாய் முந்தைய ஆண்டைக் காட்டிலும் ரூ.3.12 கோடி அதிகரித்துள்ளது.

மதுரை கோட்டத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து ஏப்ரலில், 3,166 சரக்கு பெட்டிகளில் நிலக்கரி, உரம், சுண்ணாம்புக்கல், கருவேலங்கரி, ஜிப்சம் ஆகியன பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 688 சரக்கு பெட்டிகள் அதிகம். இதன் மூலம் மதுரை கோட்டத்துக்கு ரூ.20.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ரூ.3.12 கோடி அதிகமாகும்.

மதுரை கோட்ட வணிக வளா்ச்சிக் குழுவின் முயற்சியின் காரணமாக பொட்டாசியம் உரம் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து விஜயவாடா அருகே உள்ள கோவூருக்கு ஒரு முழு சரக்கு ரயிலில் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏப்ரல் கடைசி வாரத்தில் மட்டும் மதுரை கோட்டத்திற்கு ரூ.35 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

தெற்கு ரயில்வே அளவில் ஏப்ரல் மாத சரக்கு போக்குவரத்து முந்தைய ஆண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகமாக, ரூ.283.36 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT