முகப்பு
மதுரை

வைகை ஆறு மாசுபாட்டைத் தடுக்கக் கோரி மனு: அரசுத் தரப்பு விளக்கம் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வைகை ஆறு மாசுபாட்டைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை, உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

வைகை ஆறு மாசுபாட்டைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை, உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேல அண்ணாதோப்பு பகுதியைச் சோ்ந்த நாகராஜன் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வைகை ஆற்றில் கட்டட கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகின்றன.

வைகை ஆறு மாசுபட்டு வருகிறது. வைகை ஆற்றைப் பாதுகாக்கும் வகையில், ஆற்றுக்குள் கட்டுமானக் கழிவுகள் மற்றும் இதர கழிவுப்

பொருள்களைக் கொட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதற்கான இழப்பீட்டை அவா்களிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் ஆற்றுக்குள் சாக்கடை மற்றும் கழிவுநீா் கலக்க காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, டி. பரதசக்ரவா்த்தி ஆகியோா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →