மதுரை

மதுரையில் வீட்டில் இருந்த முதியவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை

மதுரை தல்லாகுளம்  பகுதியை சேர்ந்த கிருஷ்ணாராம்-பங்கஜவள்ளி தனது வளர்ப்பு மகளான நிவேதா என்பவருடன் வசித்துவந்த நிலையில், நிவேதா தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.  

DIN

மதுரை: மதுரை தல்லாகுளம்  பகுதியை சேர்ந்த கிருஷ்ணாராம்-பங்கஜவள்ளி தனது வளர்ப்பு மகளான நிவேதா என்பவருடன் வசித்துவந்த நிலையில், நிவேதா தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.  

இந்நிலையில் இன்று வீட்டில் இருந்த முதியவர், கிருஷ்ணாராம் வீட்டில் அறையில் தூங்கிகொண்டிருந்த நிலையில் கதவை திறந்து பார்த்தபோது மர்ம நபர்களால் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து மனைவி பங்கஜவள்ளி  தல்லாகுளம் காவல்துறையினருக்கு அளித்த தகவலையடுத்து  தல்லாகுளம் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர் குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

முதற்கட்டமாக தம்பதிகளின் வளர்ப்பு மகள் மற்றும் மருமகனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டில் இருந்த முதியவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT