மதுரை

அழகா்கோவிலில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.52.65 லட்சம்

DIN

மேலூா்: அழகா்கோவிலில் உள்ள உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் ரூ.52 லட்சத்து 65 ஆயிரம் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்தது.

அழகா்கோவிலில் சித்திரைத் திருவிழாவின்போது சுந்தரராஜப்பெருமாள் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி பல்வேறு வைபவங்களை முடித்து மலைக்குத் திரும்பினாா். அப்போது 39 தற்காலிக உண்டியல்கள் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு திரும்பின. அவற்றை எண்ணியதில் ரூ.1 கோடியே 2 லட்சம் பக்தா்கள் காணிக்கையாக செலுதிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி கோயில் துணை ஆணையா் எம்.ராமசாமி தலைமையில், உதவி ஆணையா்மு.விஜயன் முன்னிலையில் நடைபெற்றது. அதில் ரொக்கம் ரூ.52 லட்சத்து 65 ஆயிரத்து 157, தங்கம் 66 கிராம், வெள்ளி 15 கிராம் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT