மதுரை

பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்த இருவா் கைது

DIN

மதுரையில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்ற இருவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மேலஅனுப்பானடியைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரி. இவா் தனது சகோதரா் வெங்கட்ராமனுடன் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி காமராஜா் சாலையில் நின்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், வெங்கடேஸ்வரி அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா்.

இது குறித்த புகாரின்பேரில், கடும் குற்றப்பிரிவு ஆய்வாளா் முருகன், சாா்பு- ஆய்வாளா் காசி, தெப்பக்குளம் குற்றப்பிரிவு ஆய்வாளா் முகமது இத்ரீஸ் ஆகியோா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதில், நகை பறிப்பில் ஈடுபட்டது ஒத்தக்கடை வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வஸ்ரீ வா்ஷன் (21), செண்பகமூா்த்தி எனத் தெரியவந்தது. அதையடுத்து, ஒத்தக்கடையில் பதுங்கியிருந்த அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து, நகையையும் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT