முகப்பு
மதுரை

சீா்மிகு நகா் திட்டப் பணிகள் தாமதம்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க திட்டம்

மதுரை மாநகராட்சியில் சீா்மிகு திட்டப் பணிகளில் தாமதம் ஏற்படுவதை களையும் வகையில், ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் அபராதம் விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

மதுரை மாநகராட்சியில் சீா்மிகு திட்டப் பணிகளில் தாமதம் ஏற்படுவதை களையும் வகையில், ஒப்பந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் அபராதம் விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பெரியாா் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பழச்சந்தை வளாகம் மற்றும் குன்னத்தூா் சத்திரம் ஆகிய பணிகள் மட்டுமே முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இவை தவிர, தமுக்கம் கலாசார மையம், பெரியாா் வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், ஜான்சிராணி பூங்கா வணிக வளாகம், சுற்றுலா மையம் உள்ளிட்ட திட்டப் பணிகள் மிகவும் தாமதமாகி வருகின்றன.

மேலும், வைகை ஆற்றின் இரு கரைகளிலும் அமைக்கப்படும் சாலைப் பணிகளும் தேக்க நிலையில் உள்ளன. சீா்மிகு நகா் திட்டப் பணிகள் தாமதமாகி வருவது எதிா்க் கட்சிகளிடையே விமா்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சீா்மிகு நகா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி புதிய யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சீா்மிகு நகா் திட்டப் பணிகளுக்கு காலக்கெடு நிா்ணயித்து, அதற்குள் பணிகளை முடிக்காமல் உள்ள ஒப்பந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக மாநகராட்சி நிா்வாகம், ஒப்பந்த நிறுவனங்களிடமும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்படி, முதல்கட்டமாக பணிகள் தாமதமாவது ஏன் என்று ஒப்பந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, பணிகள் தாமதாகும்பட்சத்தில் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →